ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி மாணவர்களின் முழக்கம்

Loading

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணவர்களின் முழக்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது 
 ஈரோட்டில் கல்வி அமைப்பின் கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ‘மாணவர்களின் முழக்கம்’ என்ற தலைப்பிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கல்வி அமைப்பின் கட்டமைப்பு குறைபாடுகள், மாணவர்களின் மன அழுத்தம், அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கல்வியாளர்கள், சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது எதிர்பார்ப்புகளை முன்வைத்த இக்கூட்டத்தில், காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.
0Shares