ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் ஆடி அமாவாசை அன்னதானம்.
![]()
ஈரோடு தாளவாடி, தலைமலை, தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோவில் சார்பாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 20-வது மாதமாக ஆடி அமாவாசையை முன்னிட்டு 2000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.
ஈரோடு தாளவாடி தலைமலை தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, கடந்த இரண்டு வருடமாக தங்களது சேவையைத் தொடர்ந்துள்ளனர். ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டில், 20-வது மாதமாக ஆடி அமாவாசையை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்ற பின்பு சிறப்பு பிரம்மாண்ட அன்னதானம் தொடங்கப்பட்டது. குறிப்பாக ஆடி அமாவாசையை முன்னிட்டு மிளகு சாதம் , எலுமிச்சை பழ சாதம், தக்காளி சாதம், காய்கறி சாதம் போன்ற நான்கு வகையான சாதங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அம்மன் கேலண்டரிங் மில் சுப்பிரமணியம், பூபதி ஆயில் மில் உரிமையாளர் S. A.ஆறுமுகம் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர். நேதாஜி காய்கறி மார்க்கெட் கடை உரிமையாளர்கள், விவசாயிகள், கோவில் அறங்காவலர்கள், அன்னதான கமிட்டியின் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டு 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்களுக்கு உணவை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சார்பாக ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியிலும் சுமார் 700 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தலமலை ஆஞ்சநேயர் திருக்கோவிலிலும் அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

