17.08.2026 முதல் இரண்டு வகை ஆவணங்கள் இணையதளம் வழியாக மட்டுமே பதிவு

Loading

பில்டர்கள், புரமோட்டர்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கவனத்திற்கு! 17.08.2026 முதல் “Presenceless Registration” – இப்போதே தயாராகுங்கள்! அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) சார்பில் அதன் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, அவர்கள் வெளியிடும் முக்கிய விழிப்புணர்வு தகவல்

தமிழ்நாடு பதிவுத்துறையின் STAR 3.0 – Anywhere Registration திட்டத்தின் முதல் கட்டமாக, 17.08.2026 முதல் கீழ்க்கண்ட இரண்டு ஆவணங்கள் Presenceless Registration முறையில் இணையதளம் வழியாக மட்டுமே பதிவு செய்யப்பட உள்ளன:

 

👉 Plot Promoters – First Sale of Plot + Consecutive Deposit of Title Deed

👉 Builders – First Sale of Flat + Consecutive Deposit of Title Deed

 

இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யும் பழைய நடைமுறை இந்த இரண்டு வகை பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. ஆகவே “17 ஆகஸ்ட்” வருவதற்கு முன்பே தயாராகுங்கள்! பில்டர்கள், புரமோட்டர்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும்:

 புதிய STAR 3.0 நடைமுறையை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள். தேவையான கணினி, இணைய வசதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Biometric / Digital Fingerprint / Digital Photo போன்ற உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருங்கள். உங்கள் அலுவலகத்தில் நடைமுறைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தற்போது நடைபெற்று வரும் Pilot / Trial நடைமுறையை தவறாமல் பயன்படுத்தி அனுபவம் பெறுங்கள். ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு கட்டத்தையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படாமல் உங்கள் பணியாளர்களுக்கும் பயிற்சி அளியுங்கள்.

 பதிவுத்துறை சார்பில் Stakeholders-க்கு Capacity Building மற்றும் Training நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே Bankers, NBFCs, Document Writers, Advocates, Promoters உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மாவட்டம் தோறும் நடைபெறும் பயிற்சிகளிலும், பதிவுத்துறையின் தலைமை அலுவலகம் சார்பில் நடைபெறும் ஆன்லைன் பயிற்சிகளிலும் கலந்து கொண்டு, புதிய முறையின் தொழில்நுட்ப நுணுக்கங்கள், நடைமுறைகள் மற்றும் செயல்முறை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு FAIRA அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

 17.08.2026 முதல் கட்டாய நடைமுறை அமலுக்கு வருவதால், கடைசி நேரத்தில் உபகரணங்கள் வாங்குவது, மென்பொருள் கற்றுக்கொள்வது அல்லது பயிற்சி பெறுவது சிரமத்தை ஏற்படுத்தலாம்.

 “நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வேண்டாம் எனவே இன்றே தயாராகுங்கள் – உபகரணங்களை தயார் செய்யுங்கள் – Pilot Scheme-ல் பயிற்சி பெறுங்கள் – Training-ல் கலந்து கொள்ளுங்கள் – STAR 3.0-வை முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள். “புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது; அதை சரியாகப் பயன்படுத்தும் திறனையும் நாம் பெற்றிருக்க வேண்டும்.”

 தமிழ்நாடு பதிவுத்துறையின் இந்த முன்னோடி டிஜிட்டல் மாற்றம் விரைவான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் எளிமையான ஆவணப்பதிவுக்கு வழிவகுக்கும் வகையில் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

 ஆகவே. பில்டர்கள் | புரமோட்டர்கள் | ஆவண எழுத்தர்கள் | வழக்கறிஞர்கள் | வங்கிகள் | பொதுமக்கள் 17.08.2026-ஐ எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பே தயாராகுங்கள் என டாக்டர் ஆ.ஹென்றி தனது விழிப்புணர்வு பதிவில் தெரிவித்துள்ளார்.

0Shares