சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பு ஆட்சியரிடம் மனு
![]()
கோவை, பெரியார் அறிவுலகக் கட்டிடத்தில் தொழில்துறை பயிற்சி மையம்! 5, மற்றும் 6-வது தளங்களைப் பயன்படுத்த சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பு கோரிக்கை!
கோவையில் உள்ள பெரியார் அறிவுலகக் கட்டிடத்தின் 5 மற்றும் 6-வது தளங்களில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையம் அமைத்து, தொழில்துறையையும் கல்வித்துறையையும் இணைக்கும் வகையில் தொழில்துறை பயிற்சி மையம் உருவாக்க வேண்டும் என சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுஇதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த நடைமுறைப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவதுடன், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் இணைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களை வேலைவாய்ப்புக்குத் தயார்படுத்துவதுடன், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும் இந்த மையம் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
பெரியார் அறிவுலகக் கட்டிட நூலகத்தில் உள்ள நூல்களின் தரம் மற்றும் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சிக்குப் பயனளிக்கும் நூல்களை இடம்பெறச் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுபெரியார் அறிவுலகக் கட்டிடம் வெறும் நூலகமாக மட்டும் இல்லாமல், தொழில்துறையும் கல்வித்துறையும் இணைந்து செயல்படும் சிறந்த தொழில்துறைப் பயிற்சி மையமாக உருவாக வேண்டும் என்றும், இதற்கான அனுமதி மற்றும் நிதியை மாநில அரசிடம் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பு மற்றும் கோவை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

