சண்டியர் திரைப்படத்துக்கு எதிர்ப்பு
![]()
சண்டியர்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு – கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய தமிழகம் சார்பில் புகார்
`சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கமலஹாசன் மற்றும் இயக்குநர் அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதற்கும், அதில் இடம்பெற்றுள்ள ‘பழிக்கு பழி இரத்தத்தால் மட்டுமே தீர்க்கப்படும்’ என்ற வாசகத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கோவை மாநகர ஆணையரிடன் புகார் மனு அளித்துள்ளார். ஏற்கெனவே 2004-ல் இதே பெயரில் திரைப்படம் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பெயர் மாற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தற்போது மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்துவது சாதிய மோதல்களையும் சமூகப் பதற்றத்தையும் உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளனர். எனவே, திரைப்படம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தனர்.
பேட்டி- சங்கர் குரு

