கோவை பட்டாசு வாங்கி பரிசு பெற்ற பொதுமக்கள்

Loading

கோவை வடவள்ளி அடுத்த சின்மயா வித்யாலயா பள்ளி அருகே, தீபாவளி தற்காலிக பட்டாசு கடையில் பரிசுகளை அள்ளி சென்ற பொதுமக்கள்.. 
கோவை வடவள்ளி அருகே உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி அருகே, குரு வேல் பட்டாசு கடை எனும் தற்காலிக பட்டாசு கடை செயல்பட்டுவந்தது. இந்த கடையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ப்ரத்யேக, பரிசு திட்டங்கள் அறிவிக்க பட்டது. அதில் 1500 ரூபாய்க்கு மேல் பட்டாசுகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன்கள் வழங்கபட்டு, பல்வேறு சிறப்பு பரிசுகள் அறிவிக்க பட்டிருந்தது இந்த நிலையில் இன்று பொதுமக்கள் முன்னிலையில் டோக்கன்களை குடத்தில் போட்டு, குழந்தைகளின் கைகளினால் அதை எடுக்க வைத்து பரிசுகள் அறிவிக்க பட்டது. இதில் முதல்பரிசாக பிரிட்ஜை சக்தி வேல் என்பவரும்,
இரண்டாம் பரிசான வாஷிங் மெஷினை சந்துரு என்பவரும், மூன்றாம் பரிசாக இன்டக்ஸன் ஸ்டவ்வை நந்தினி என்பவரும் பெற்றனர் இவர்களுக்கு பரிசுகளை கடையின் உரிமையாளர்களான, சதிஷ் குமார், ஆறுச்சாமி, மகேஷ், அருள், விக்கி, ராஜ்குமார், ஆகியோர் வழங்கினனர் பரிசுகளை பெற்ற வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததுடன் தீபாவளி முடிந்து, இந்த பரிசுகள் தங்களுக்கு வழங்கப்பட்டது தங்களுக்கு இந்த தீபாவளியை மறக்க முடியாத தீபாவளியாக அமைந்துள்ளது என்றனர். மேலும் இங்கு வாங்கிய பட்டாசுகள் அனைத்தும் தரமானதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
0Shares