எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாள் விழா
எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாள் விழா
அதிமுக நிறுவனர் மறைந்த தமிழக முதல்வர் பாரத்ரத்னா எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாள் விழா. தூத்துக்குயில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தூத்துக்குடி ஜன 18,
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சித் தலைவரின் 107வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருப்படத்திற்கும் பின்னர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கும் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி புரட்சித்தலைவரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, மாவட்ட பிற அணி செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன், பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர், டாக்டர் இராஜசேகர், பகுதி கழக செயலாளர்கள் முருகன், சேவியர், ஜெய்கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், பகுதி பொறுப்பாளர்கள் சுடலைமணி, முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாநகராட்சி எதிர்கட்சி கோறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லட்சுமணன், ஜோதிமணி, எம்.பெருமாள், ஐடியல் பரமசிவம், ஜான்சன்தேவராஜ், கே.கே.பி.விஜயன், கே.டி.சி.ஆறுமுகம், மனுவேல்ராஜ், பி.ஜே.சி.சுரேஷ், ரமேஷ்கிருஷ்ணன், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், டைகர் சிவா, சொக்கலிங்கம், முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர்கள் மெஜூலா, சாந்தி, தமிழரசி, செல்லப்பா, பொன்ராஜ், மணிகண்டன், ஹார்பர் பாண்டி, அண்ணா தொழிற்சங்க ஜவஹர், முத்துலெட்சுமி, இராஜேஷ்வரி, இந்திரா, ஷாலினி, உலகநாதபெருமாள், நிலா சந்திரன், டேவிட், ஆனந்த், உதயா, பாலஜெயம், சாம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டி மரியாதை செலுத்தினர்.