அம்பத்தூர், அரசினர் தொழிற்பயிற்சி சேர்க்கை

Loading

அம்பத்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தகவல்:
திருவள்ளூர் மே 26 : அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், சென்னை -600050ல் தொழிற் பிரிவுகளின் இருக்கைகளை நிரப்புவதற்கு https://skilltraining.tn.gov.in/detitiadm/ என்ற இணையதளம் வாயிலாக (Online Admission) சேர்க்கை நடைபெற்று வருகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சி அளிக்கப்படும் தொழிற் பிரிவுகளின் விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் மற்றும் தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் 8 th /10 th மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ்,வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-5 ஆகியவற்றை நேரில் எடுத்து வர வேண்டும். சேர்க்கை கட்டணம் ஓர் ஆண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.235/- மற்றும் ஈராண்டு  தொழிற் பிரிவுக்கு ரூ.245/- தொழிற் பிரிவுகள் : தையல் தொழில் நுட்பம், பயிற்சி காலம் : 1 வருடம், கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.தொழிற் பிரிவுகள் : கோபா, அழகு சாதனவியல் (Cosmetology), Stenography DOTE (Tamil &English), பயிற்சி காலம் : 1 வருடம், கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. தொழிற் பிரிவுகள் : கட்டிடப்பட வரைவாளர், பயிற்சி காலம் : 2 வருடம், கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 9444017528 /9629666279 / 9789759825 / 9566058460 / 6381682005 / 9840385562 என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares