திருவள்ளூரில்380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
![]()
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் மே 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் பொதுமக்களிடம் இருந்து 380 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு உரிய தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
இம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 380 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 72 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 96 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 98 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி 32 மனுக்களும் மற்றும் இதர துறைகள்
சார்பாக 82 மனுக்கள் என ஆக மொத்தம் 380 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் மாற்றுத்திறனாளிகளு க்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சார்பாக 82 மனுக்கள் என ஆக மொத்தம் 380 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் மாற்றுத்திறனாளிகளு
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) வெங்கடேசன், உதவி ஆணையர் (கலால்) வி.கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) செ.சண்முக பிரீத்தா மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டனர்.

