ஈரோடு பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

Loading

ஈரோடு பூம்புகார் நிலையத்தில் கோடைகால சிறப்பு கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம்
தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில், கோடைகால சிறப்பு கைவினைப் பொருட்கள் கண்காட்சி உற்சாகமாகத் துவங்கியது. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியில், கலைநயமிக்க பித்தளைச் சிலைகள், நுணுக்கமான மரவேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள் மற்றும் வண்ணமயமான ஜெய்ப்பூர் கைவினைப் பொருட்கள் எனப் ஏராளமான கலைப்பொருட்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரம்பரியமிக்க தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் ஜெய்ப்பூர் கலைப்பொருட்கள் கண்காட்சிக்கு வரும் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. இக்கண்காட்சியில் கைவினைப் பொருட்களின் விலை 60 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புத் தள்ளுபடியிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கோடை விடுமுறையையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை கண்காட்சிக்கு முதல் நாளிலேயே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்குப் பிடித்த கலைப்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
0Shares