கோவையில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனை
![]()
கோவை
கோவை சரவணா நகர் பகுதியில் உள்ள பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக, கோவை சாய்பாபா காலனியில் ஞாயிறு ஆராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.. இதில் நடனமாடி உற்ச்சாக படுத்திய குழந்தைகள்
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த சரவணா நகர் பகுதியில், பெத்லஹேம் ஜாய் எனும் ஜெபவீடு அமைந்துள்ளது. இந்த ஜெபவீட்டின் சார்பாக,
கோவை சாய்பாபா காலனியில், உள்ள தனியார் அரங்கில் ஞாயிறு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் போதகர் ஜான் பீட்டர் கலந்து கொண்டு பைபில் வசனங்களை வாசித்தும், பாடல்கள் பாடியும், சிறப்பு ஆராதனை வழிபாட்டினை நடத்தினார்.
பைபில் வசனங்களில் இயேசு பிதா என்னென்ன கூறுகின்றார் எந்த சூல்நிலையில் எங்வாறு நடந்து கொண்டார் என, பைபில் பதிவு செய்ய பட்ட விளக்கங்களை எடுத்து கூறினார். தொடர்ந்து ஞாயிறு ஆராதனையை தொடர்ந்து, பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக, பெண்கள், குழந்தைகள் என பலரும் நடன நிகழ்ச்சியை மேற்கொண்டனர். பைபில் வசனங்களை பாடல்களாக பாடி நடனமாடியது உற்ச்சாக மடைந்தனர். இந்த தேவாலயத்தின் சார்பாக கடந்த நாண்கு நாட்களாக நடைபெற்ற விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம், உதவி போதகர் ஜெயக்குமார், சந்திரன், அரசு போக்குவரத்து கழக பணியாளர் ராஜேஷ், பாஸ்டர் அம்மா ஜாய், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

