கோவை மாணவர்கள் சாதனை
![]()
கோவை
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நடைபெற்ற மூன்றாவது சவுத் ஏசியன் ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு ஒவர் ஆல், அனைத்து பரிசுகளையும் தட்டி சென்ற யாசூக்கான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள்..
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில், விஜய வித்யாலயா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் இயங்கி வரும் யாசூக்கான் கராத்தே பயிற்சி பள்ளி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற மூன்றாவது சவுத் ஏசியன் ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றது. கடந்த 7ம் தேதி நடைபெற்ற இந்த கராத்தே போட்டிகளில், கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டா, குமித்தே உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில், கோவை யாசக்கான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள், ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
அவ்வாறு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் இன்று விஜய் வித்யாலயா பள்ளியில் பள்ளியின் தாளாளர் கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்கள் இந்த வயதில் கற்கும் கல்வி, கராத்தே பயிற்சிகள் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவே மாணவ மாணவியர்கள் இது போல பல்வேறு சாதனைகளை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினர், இந்த நிகழ்ச்சியில் யாசூக்கான் கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் வரதராஜன், முன்னணி கராத்தே பயிற்சியாளர் சந்துரு, சிவனேஸ்வரன், தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

