காரை வாய்க்கால் சுயம்பு ஸ்ரீ நாகர் ராகு-கேது யாக பூஜை
![]()
ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு ஸ்ரீ நாகர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பரிகார யாக விழா
ஈரோடு காரை வாய்க்காலில் அமைந்துள்ள ராகு-கேது, சனி பகவான் பரிகார ஸ்தலமான சுயம்பு ஸ்ரீ நாகர் ஆலயத்தில் பராபவ வருடம் ஐப்பசி மாதம் 27-ஆம் தேதி (13.11.2026) வெள்ளிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் பிரவேசித்ததை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாகப் பகல் 2.30 மணிக்கு மேல் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், மூலவருக்கு விசேஷ யாக பூஜை, ஆலஹுதி, ராகு-கேது கவச நாம ஹோமம், கடம் தீர்த்தம் மற்றும் அபிஷேகம் ஆகியவை விமரிசையாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு மேல் மூலவருக்கும் ராகு-கேதுவிற்கும் சிறப்புப் பால் அபிஷேகமும், மஹாதீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்தப் பெயர்ச்சியின் மூலம் சிம்மம், மீனம், விருச்சிகம் ஆகியவை சுபராசிகளாகவும், மேஷம், கடகம், துலாம், மிதுனம், தனுசு, மகரம், கும்பம், கன்னி, ரிஷபம் ஆகிய ராசிகள் பரிகார ராசிகளாகவும் அமைந்துள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

