திருவொற்றியூரில்13வயதுசிறுமிபாலியல்வன்கொடுமை
![]()
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார்.இந்த வழக்கு விசாரணையில் இறுதியாக போக்சோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பாக வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கபிலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதேபோல் சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் கடந்த 2021 இல் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது, 9 வயது, 15 வயது உள்ளிட்ட 3 சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அந்த சிறுமிகளின் பெற்றோர்கள் இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரமேஷை போக்úஸô சட்டத்தில் கைது செய்தனர். அதையடுத்து திருவள்ளூர் போக்úஸô நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பாக வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரமேஷை புழல் சிறையில் அடைத்தனர்.

