1 ம் தேதி மே தினத்தன்று மதுக்கூடங்கள் மூடவேண்டும்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுக்கூடங்கள் வரும் 1 ம் தேதி மே தினத்தன்று தற்காலிகமாக மூடப்பட வேண்டும் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவு :
திருவள்ளூர் ஏப் 30 : திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுக்கூடங்கள்,கிளப்புகள் மற்றும் ஹேட்டல்கள் ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணைவிதி (1)-ன் படி, 01.05.2026 (வெள்ளி) மே தினத்தன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் மற்றும் உரிமதார்களின் மீது 1981-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares