டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
![]()
பெரியபாளையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் ஏப் 30 : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பெரியபாளையம் தனியார் அரங்கில் செங்குன்றம் சுற்றுவட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பெரியபாளையம் பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கெüரவத் தலைவர்கள் பி.ரவி, சி.வேலு ஆகியோர் தலைமை தாங்கினார்.அந்த சங்கத்தின் துணைத் தலைவர் ஜி.சிலம்பரசன், துணைச் செயலாளர் வி.எஸ்.ராஜேஷ்குமார், துணை பொருளாளர் கே.அசோக்குமார், இணைத் தலைவர் டி.மகேஷ், இணைச் செயலாளர் ஏ.மோகன், இணைப் பொருளாளர் கே.ஏ.எம்.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,சங்கத்தின் தலைவர் எஸ்.காமராஜ், செயலாளர் டி.பாலகிருஷ்ணன், பொருளாளர் எம்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் கோட்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினர்.அப்போது, சங்கத்தின் சார்பில் லாரி உரிமையாளர்களே சப்ளையர்களாக உருவாக்க வேண்டும். சங்கத்தின் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும். இச்சங்கத்தில் 230}க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்தினராக இருப்பதால் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதிக அளவு உறுப்பினர்கள் இருப்பதால் குரூப் இன்சூரன்ஸ் ஏற்படுத்தவும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் செங்குன்றம் சுற்றுவட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பெரியபாளையம் பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பெரியபாளையம் பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்கள் செய்திருந்தனர்.

