Skip to content
Saturday, August 8, 2026
Latest:
  • கைம்பெண்கள்,ஆதரவற்ற பெண்கள்,பேரிளம் பெண்கள் நல வாரியசிறப்பு முகாம்
  • திருத்தணி முருகன் கோயிலில் விழாக்கோலம்
  • கோவையில் தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு
  • கோவையில் பாரா கிரிக்கெட் போட்டிகள்
  • கோவையில் கார்ஸ் மேளா திருவிழா
செய்திஅலசல் l Seidhialasal

செய்திஅலசல் l Seidhialasal

Tamil Online NewsPaper

Visitors: 0

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
  • புதுச்சேரி
  • மருத்துவம்
  • கிரைம்
  • ஜோ‌திட‌ம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • e-Papers
    • Today e-Paper
    • Other e-Papers
    • English
ஒதுக்கப்பட்ட நிலங்களை வழங்க ஆட்சியரிடம் மனு
மாவட்டம் 

ஒதுக்கப்பட்ட நிலங்களை வழங்க ஆட்சியரிடம் மனு

29 July 202629 July 2026 Seidhi Alasal Petition submitted to the Collector seeking allotment of earmarked lands.

Loading

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை வழங்கக் கோரி தலித் விடுதலை இயக்கம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு**
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், மாத்தூர் கிராமத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு நிலமில்லாத பட்டியலின மக்களுக்கு சுமார் 250 ஏக்கர் நிலம் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 30 ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு இன்னும் நிலம் வழங்கப்படவில்லை என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள அந்நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கக் கோரியும் தலித் விடுதலை இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ச.கருப்பையா ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அம்மனுவில், “ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் 1956-களில் உருவாக்கப்பட்ட ‘கிராம நிலகுடியேற்ற கூட்டுறவு சங்கங்கள்’ மூலம் பட்டியலின மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பெரும்பாலான பகுதிகள் தகுதியான பயனாளிகளுக்குச் செல்லாமல் பிற நபர்களின் ஆக்கிரமிப்பிலும் பயன்பாட்டிலும் உள்ளன. குறிப்பாக கோபி, அந்தியூர் வட்டங்களில் அருந்ததியர், பறையர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களும், நில குடியேற்ற சங்க நிலங்களும் பிற சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தகுதியான பட்டியலின மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாத்தூர் கிராமத்தில் 250 ஏக்கர் இலவச நிலம் வழங்க பல்வேறு அரசு ஆணைகளும், நில நிர்வாக ஆணையரின் கடிதங்களும் உள்ள போதிலும், கடந்த 30 ஆண்டுகளாக அந்நிலங்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதி காப்பு காடுகள் மற்றும் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நில ஒப்படை வழங்க இயலாது என மாவட்ட நிர்வாகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 18.09.1971-ஆம் ஆண்டு அரசாணை (G.O.Ms.No.2621)-ன் படி வனத்துறையிடம் இருந்து வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்ட சுமார் 1500 ஏக்கர் நிலங்கள் இதுவரை எந்த பயனாளிகளுக்கும் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட நிலமில்லாத பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சிறப்பு அரசாணை இயற்றி, நிலங்களை வழங்கிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தலித் விடுதலை இயக்கம் சார்பாக கேட்டுக்கொண்டனர்.
0Shares
  • ← இன்றைய ராசிபலன் – 29-07-2026
  • இன்றைய ராசிபலன் – 30-07-2026 →

You May Also Like

நாட்டு பட்டாசு வெடித்து 4 மாடுகள் காயம்

நாட்டு பட்டாசு வெடித்து 4 மாடுகள் காயம்

29 April 202629 April 2026 Seidhi Alasal

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 105 வது பிறந்த தினம்.! 

19 November 202219 November 2022 Seidhi Alasal 0

கள்ளக்குறிச்சி மாவட்டம் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆலோசனைக்கூட்டம்

10 January 202210 January 2022 Seidhi Alasal 0

Ads

இந்தியா

Good news for Indians living in the USA.. The postal parcel service has started again!
இந்தியா உலகம் 

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..மீண்டும் தொடங்கியது தபால் பார்சல் சேவை!

15 October 202515 October 2025 Seidhi Alasal

Loading

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக

Former Canadian Prime Minister enjoys boating with wife..? Viral scenes!
உலகம் 

முன்னாள் கனடா பிரதமர் பாப் பாடகியுடன் படகில் உல்லாசம்..? வைரலான காட்சிகள்!

13 October 202513 October 2025 Seidhi Alasal
Diesel subsidy cancellation: Intensifying protest against the chief!
அரசியல் உலகம் 

டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

7 October 20257 October 2025 Seidhi Alasal
Eiffel Tower closure.. Tourists disappointed!
அரசியல் உலகம் 

ஈபிள் கோபுரம் மூடல்..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
A peace agreement is established.. Hamas is subservient to America!
உலகம் கிரைம் 

அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. அமெரிக்காவுக்கு அடிபணிந்தது ஹமாஸ்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
Copyright © 2026 செய்திஅலசல் l Seidhialasal. All rights reserved.
Theme: Seidhi Alasal by Seidhi Alasal.