இன்றைய ராசிபலன் – 11-09-2026

Loading

மேஷம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்:

காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவை யைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

மிதுனம்:

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவு களை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மம்:

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

கன்னி:

அதிர்ஷ்டகரமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்:

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதன் காரணமாக கையிருப்பு கரைவ துடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர் பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்:

தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியா ளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

தனுசு:

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத் தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்:

இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். மாலையில் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களி டம் கனிவாக நடந்துகொள்ளவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கும்பம்:

எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் சங்கடத்தை ஏற்படுத்தும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்:

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கணவன் – மனை விக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்குக் கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

 

0Shares