பழைய தங்கத்தை மாற்ற செய்ய தனிக்ஷ்சிறப்புச் சலுகை

Loading

கோவையில், பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்தால் கூடுதலாக, 1 காரட் மதிப்பில், தனிக்ஷ் நிறுவனம் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது 
டாடா குழுமத்தைச் சேர்ந்த பிரபல நகை விற்பனை நிறுவனமான தனிக்ஷ் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களின் பழைய தங்க நகைகளைப் பரிமாற்றம் செய்து புதிய நகைகளை வாங்கும் வகையில் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளைப் பரிமாற்றம் செய்து, அதன் மதிப்பில் கூடுதலாக ஒரு காரட் மதிப்பைப் பெறும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் நவம்பர் 8ஆம் தேதி 2026 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியக் குடும்பங்களிடம் சுமார் 25 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்படும் நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய தங்கத்தை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு ள்ளது. குறிப்பாக, தனிஷ்க் நிறுவனத்தில் மட்டுமின்றி, பிற நகைக் கடைகளில் வாங்கிய பழைய தங்க நகைகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய மற்றும் உடைந்த தங்க நகைகளையும், வாங்கியதற்கான ரசீது இல்லாமலும் பரிமாற்றத்திற்குக் கொண்டு வரலாம். 9 காரட் முதல் பல்வேறு தூய்மை நிலைகளைக் கொண்ட தங்கத்திற்கும் பரிமாற்ற வசதி வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தங்கத்தின் எடை, தூய்மை பரிசோதனை மற்றும் உருக்கும் செயல்முறை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன. காராமீட்டர் கருவி மூலம் தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்படுவதுடன், மறைமுகக் கழிவுகள் இன்றி பரிமாற்றம் நடைபெறுவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
திருமண நகைகள் வாங்குவோர், பழைய நகைகளை நவீன வடிவமைப்புகளுக்கு மாற்ற விரும்புவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இந்தச் சலுகை பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பழைய தங்கத்திற்கு கூடுதல் மதிப்பைப் பெறுவதுடன், புதிய வடிவமைப்புகளில் தங்கம் மற்றும் வைர நகைகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனிக்ஷ் கடைகளிலும் இந்தச் சலுகை கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
0Shares