கோவையில் மாற்று திறனாளிகளுக்காக பதிய திட்டம்

Loading

கோவை இரயில் நிலையத்தில், மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வழி உதவி மையம் துவங்கபட்டுள்ளது.
இதனை விஸ்வநாதன் சுடலைமுத்து அறக்கட்டளை மற்றும் சுவர்கா அறக்கட்டளை இணைந்து துவங்கியது..
பொது பயண்பாட்டு பகுதிகளில், அனைவருக்கும் சமமான வசதிகளை உருவாக்கும், உரிய நோக்கில் விஸ்வநாதன் சுடலைமுத்து அறக்கட்டளை மற்றும் சுவர்கா அறக்கட்டளை இணைந்து வழி என்ற புதிய உதவி மைய திட்டத்தை துவங்கியுள்ளது. மறைந்த கே. எஸ். விஸ்வநாதன் நினைவாக துவங்கபட்டுள்ள இந்த திட்டம் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்று, தனது முதல் திட்டத்தை, கோவை ரயில் நிலையத்தில் 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் நடமாட உதவி தேவைப்படும் பயணிகளின் பாதுகாப்புடன் பயணிக்க இந்த மையம் வழிவகை செய்யும். தென்னக ரயில்வேயின் ஒத்துழைப்போடு செயல்படும், இந்த வழி எனும், உதவி மையம், இரயில் நிலையத்திற்குள் வருவது முதல், பிளாட்பாரங்கள் வழியாக, ரயில் பெட்டிகளில் உள்ள தங்கள் இருக்கையை அடைவது வரை சர்க்கரை நாற்காலி உதவி வழங்கப்படும். ரயில்வே பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, பயணிகள் ரயிலில் எளிதாக ஏறவும், இறங்கவும் சாய்வு பாதைகள் அமைக்கப்படும். தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமாக, பயணிகள் ரயில் நிலையத்திற்கு வரும் முன்பே, இந்த உதவிகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், சக்கர நாற்காலி உதவியுடன் டாக்ஸிகளில் ஏறக்கூடிய, டாக்ஸிகளை ஒருங்கிணைத்து பயணிகள் தடை இன்றி தங்கள் இடத்தை சென்று அடைய இந்த மையம் உதவிடும் எனவும், பயணிகள் கருத்துக்களை கேட்டு, சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தும் வழிமுறைகளும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்பு உதவி மையத்திற்கு தேவையானவற்றை விஸ்வநாதன் அறக்கட்டளை முழுமையாக வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை புலியகுளம் பகுதியில் உள்ள, சுவர்கா வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இந்த திட்டம் குறித்து விஸ்வநாதன் சுடலைமுத்து அறக்கட்டளையின் அரங்காவலர் சுரேஷ்குமார், சுவர்கா அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்வர்ணலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இதனை தெரிவித்தனர்…
0Shares