கணேஷ்பொறியியல்கல்லூரி202615வதுஆண்டுவிழா

Loading

சேலம்
கணேஷ் பொறியியல் கல்லூரியில் ‘RAZZMATZZ–2026’ 15வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
சேலம் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள கணேஷ் பொறியியல் கல்லூரியில் “RAZZMATZZ–2026” 15வது ஆண்டு விழா. பிப்ரவரி ’28 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் மு. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் க.விஜய கணேஷ், பொருளாளர் தா. செந்தில்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மு. சகாஷ் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தனி நடனம், குழு நடனம், பரதநாட்டியம், குறுநாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும்1 பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0Shares