கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த திட்டம்

Loading

கோவை மாநகரில், ‘ரோட்டரி யுனைட் வனம்’ எனும் திட்டம் தொடக்கம், இந்த திட்டத்தின் மூலமாக, சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. முதல் மரக்கன்றை நட்டு வைத்து துவக்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்!!! 
கோவையில் சிறுதுளி என்ற, அமைப்பு, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கோவையின், நீர்வளப் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பசுமைப் பரப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி நிலங்கள், ரயில்வே துறை நிலங்கள், கல்வி நிறுவனங்கள், கிராம ஊராட்சி நிலங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட பசுமைப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கோவையில், சுமார் 1.5 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான சாத்தியமுள்ள நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சிறுதுளி அமைப்பு, பேரூர்–செட்டிபாளையம் ஊராட்சி இணைந்து, பேரூர்–செட்டிபாளையம் ஊராட்சியில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு பால கணபதி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், கோவையின் அனைத்து ரோட்டரி சங்கங்களின் ஆதரவுடன் ‘ரோட்டரி யுனைட் வனம்’ என்ற புதிய மரம் நடுதல் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் முதல் மரக்கன்றை நட்டு வைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் ரமேஷ், ரோட்டரி மாவட்டம் 3206-ன் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர்.எஸ். மாருதி, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வெஸ்ட் தலைவர் ரோட்டேரியன் சந்திரசேகர், செயலாளர் ரோட்டேரியன் முத்தழகப்பன், சமூக சேவைப் பிரிவுத் தலைவர் ரோட்டேரியன் சசிகுமார், திட்டத் தலைவர் ரோட்டேரியன் சுப்பிரமணியன், பல்வேறு ரோட்டரி சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்
0Shares