தமுமுக நிர்வாகிகள் மீது போட்ட வழக்கு தள்ளுபடி

Loading

கோவையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின், கோவை மாவட்ட நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டது. 
கடந்த, 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஜனநாயக ரீதியில் ஆற்றுப்பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, கோவை மாவட்ட தலைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. கோவை நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை குனியமுத்தூர் காவல் நிலையம் காவல்துறை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமுமுகவினர் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முழுமையாக தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் மு. ஜைனுல் ஆபிதீன் ஆஜராகினார்.
0Shares