கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த பேரணி
![]()
கோவை, விஜிஎம் மருத்துவமனை சார்பாக, ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ எனும் பேரணி நடைபெற்றது
மூட்டுவாத விழிப்புணர்வுக்காக கோவையில் நடைபெற்ற நடைப்பேரணி 1000-க்கும்மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
உலக மூட்டுவாத தினத்தை முன்னிட்டு, மூட்டுவாதம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விஜிஎம் மருத்துவமனையின் ஓர் அங்கமான விஜிஎம் ஆர்த்தோ கேர் சார்பில் ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ என்ற விழிப்புணர்வு நடைப்பேரணி நடைபெற்றது. இதில் 6 கல்லூரிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.
விஜிஎம் ஆர்த்தோ கேர் பிரிவின் தலைவரும், மூட்டுவாதம் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சுமன் சிபிஎஸ் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மூட்டுவாதத்தைத் தடுப்பதில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, முறையான உடற்பயிற்சி மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் சுமன் சிபிஎஸ் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது.. வாழ்க்கைமுறையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
விஜிஎம் குழுமத் தலைவர் டாக்டர் வி. ஜி மோகன் பிரசாத் கூறியதாவது.. “மூட்டுவாதம் உயிருக்கு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், அது ஒருவரின் இயல்பான வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இதற்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்,” என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ள வழிகாட்டினார். மேலும், ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 100 நோயாளிகள் அல்லது பொதுமக்களிடம் மூட்டுவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் மதுரா பிரசாத் சுமன், டாக்டர் வம்சி மூர்த்தி, டாக்டர் மித்ரா பிரசாத், மற்றும் டாக்டர் கோகுல்க்ருபா சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இளைஞர்களிடையே மூட்டுகளின் ஆரோக்கியம், நோய்த் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நடைப்பேரணியின் நோக்கமாக அமைந்தது.

