வினாடிவினா போட்டி பங்கேற்க மாணவர்கள் பயணம்

Loading

வேலூர்
நெய்வேலியில் நடைபெறும் மாநில அளவிலான துளிர் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க வேலூர் மாவட்டத்திலிருந்து மாணவர்கள் பயணம்.
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாநில அளவிலான துளிர் & ஜந்தர் மந்தர் வினாடி வினாப் போட்டிகள்  08-02-2026 ஞாயிறு அன்று நெய்வேலி என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அறிவியல் கணிதம் வானவியல் அறிவியல் தொழில்நுட்பம் அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வினாடி வினா போட்டி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடைபெறுகிறது.
மாநில போட்டியில்
இளநிலை ( 6,7,8 வகுப்பு )
 உயர்நிலை ( 9 & 10) முதுநிலை (  11&12)ஆகிய மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குழுக்கள் பங்கேற்க வேலூர் மாவட்டத்தில் இருந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி லத்தேரி மற்றும் கே வி குப்பம் குடியாத்தம் ஆர் எஸ் மேல்நிலைப்பள்ளி பேரணாம்பட்டு பெரியதாமல் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேலூர் வள்ளல் கிருஷ்ணசாமி முதலியார் அரசு நிதி உதவிமேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து 27 மாணவ மாணவிகளும் 5 ஆசிரியர்களும் 6 அறிவியலை இயக்க நிர்வாகிகளும் இன்று பிற்பகல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முத்து சிலுப்பன் செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் ஆகியோர் வழயனுப்பி வைத்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் வி.செல்வராஜ் பி.ரவீந்திரன் ப. ராஜேந்திரன், பெ.ராமு பி.சுகுமார் ஆடியோ ப.சேகர்,  கலைச்செல்வன் ஆகியோர் உடன் புறப்பட்டு சென்றனர்.டிசம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த போட்டிகள் கடும் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன எனவே இந்த போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நெய்வேலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
0Shares