கோவை நஞ்சப்பா நகரில் நடைபெற்ற சுதந்திர தின விழா

Loading

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக கோவை நஞ்சப்பா நகரில் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 80வது சுதந்திர தின விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக நடைபெற்றது.
இப்பகுதியில் தொடர்ந்து 25வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில், திமுக முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கான மற்றும் பொதுமக்களுக்காக பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, குழந்தைகளுக்காக ஓவியப்போட்டி, ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், ஊசி நூல் கோர்த்தல், சைக்கில் பந்தயம், ஆண்களுக்கான உறியடிக்கும் போட்டி, பெண்களுக்கான லெமன் அண்ட் ஸ்பூன், லக்கி கார்னர் உள்ளிட்ட போட்டிகள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து நடனப் போட்டியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும், கடந்த கல்வியாண்டில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருவள்ளுவர் படிப்பகத்தின் ராமகிருஷ்ணன் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இது குறித்து இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பிரவீன் கூறுகையில்,
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் நடத்தப்படும் இத்தகைய விழாக்கள் மூலம் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் நட்பு பலப்படுவதாகவும், ஒற்றுமை உணர்வு மேலோங்குவதாகவும் கூறினார்.
0Shares