கோவை அரசூர் பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
![]()
கோவை அரசூர் பகுதியில் உள்ள
கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
கோவை, அவிநாசி சாலை, அரசூரில் அமைந்துள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், நாட்டின் 80வது சுதந்திர தின விழா தேசப்பற்று, உற்சாகம் மற்றும் பெருமிதத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கல்லூரி வளாகத்தில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் தேசப்பற்று வெளிப்படும் வகையில் அணிவகுப்பு சிறப்பாக அமைந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச தடகள வீரரும், வருமான வரித்துறை உதவி ஆணையருமான கிரிஷ் பீதோவன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். தனது உரையில், இளைஞர்களே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்தி என்றும், தங்களது அறிவு, திறமை, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கே.பி.ஆர்.சி.ஏ.எஸ்-ன் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த தலைவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்வதோடு, அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பாதுகாத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். குறிப்பாக, மாணவர்கள் தேசப்பற்று, ஒற்றுமை, பொறுப்புணர்வு மற்றும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

