250க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற போதை பொருள் எதிர்ப்பு

Loading

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 80 கி.மீ.க்கு “போதை இல்லா கோவை” விழிப்புணர்பு சைக்கிள் பேரணி
சிறார்கள் முதல் பெரியவர்கள் என 250க்கும் மேற்பட்டடோர் பங்கேற்ற போதையில்லா கோவை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கொ வைத்த காவல்துறையின் உயர் அதிகாரிகள் 
நாட்டின் 80-வதுவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 80 கி.மீ. தொலைவு “போதை இல்லா கோவை” என்ற விழிப்புணர்வோடு, 250க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஐ.ஜி. ரம்யா பாரதி ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி. சாமிநாதன் ஐ.பி.எஸ்., மற்றும் சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்ரீ கிரி பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். கோவை காவலர் பயிற்சி மையத்திலிருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, மாதம்பட்டி, கோவை குற்றாலம் சாடிவயல், வெள்ளியங்கிரி மலை, தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஆர்.எஸ்.புரம் வழியாக கோவை அவிநாசி சாலை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இதில் ஐந்தரை வயதான செல்வன் முதல் 78 வயது வரையிலான புதிய வரை அனைவரும் 40 கிலோமீட்டர் மற்றும் 80 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளில் போதையில்லா கோவை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதுகுறித்து சமூக ஆர்வலரும் சைக்கிளிஸ்ட்மான ஜி.டி. விஷ்ணு ராம் பேசும் போது, போதை பொருள் சமூகத்தில் பெரும் பண்பாட்டு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் அதனை தடுக்கும் பொருட்டு இந்த போதையில்லா கோவை சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் நுகர்வு இருப்பதனை பார்க்கும் பொழுது பதட்டம் ஏற்பாடுவதாக தெரிவித்த சைக்லிஸ்ட் விஷ்ணு ராம், போதையில்லா சமூகத்தை படைத்து பாதுகாப்பான வாழ்வினை அனைவரும் வாழ்வதற்கு உறுதுணையாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். சைக்கிளிங் போன்ற உடல் நலத்தை பேணும் போட்டிகளில் தீவிர பயிற்சியில் இறங்கும் பொழுது, அது கற்றுத் தரும் நல்லொழுக்கம், போதையில்லா சமூகம் படைப்பதற்கு உறுதுணையாக, சமூகத்திற்கு பாதுகாப்பான வழிகளை, வாழ்வியல் நெறிமுறைகளை கற்றுத் தரும் என விஷ்ணு ராம் தெரிவித்துடன் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பாக உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர் .
0Shares