சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு விழா தேசிய விழாவாக கொண்டாடப் பட வேண்டும்
சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு விழா தேசிய விழாவாக கொண்டாடப் பட வேண்டும்:
தமிழர்களுடைய அடையாளம் என் பதே அவர்களின் பழங்கலைகள்தான்; அதனைப் போற்றி பாதுகாத்திட வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் திரைப்பட நடிகருமான நாசர் பேசினார்.
நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 101 வது நினைவேந்தல் விழா புதுச்சேரி மாநில கலை இலக் கிய பெருமன்றத்தின் சார்பிலும், புது ச்சேரி அரசு பங்கேற்புடனும், அரசு விழாவாக, கலைஞர்-எழுத்தாளர் களின் பேரணி ஊர்வலத்துடன், அவ ரது புதுவை கருவடிக்குப்பம் மயானத் தில் உள்ள நினைவிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன் றத்தின் புதுச்சேரி மாநில மதிப்புறு தலைவர் மு.கு. இராமன் தலைமை யில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி அமைச்சர் க.லட்சுமி நாராயணன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் அ. கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், புதுவை முன்னாள் அமைச்சருமான விசுவ நாதன், இந்திய கம்யூ.கட்சியின் புதுவை மாநில செயலாளரான அ.மு. சலீம், தென்னிந்திய நடிகர் சங்கத் தின் தலைவர் நாசர், துணைத் தலை வர் பூச்சி முருகன், நாடக ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் பார்த்திபராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்புரைத்து பேசினர்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன் றத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் எல்லை சிவக்குமார் , மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆதிராமன் ,வ. சுப் பையா உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்திட்டனர்
கருவடிக்குப்பம் மயானபூமியின் நினைவிடத்திலுள்ள சங்கரதாஸ் சுவாமிகளின் திரு உருவச்சலைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன் றத்தினர், மதுரை, திண்டுக்கல், புதுக் கோட்டை,மணப்பாறை உள்ளிட்ட தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத் தினர், புதுச்சேரி நாடக கலைஞர்கள் பொதுநல கூட்டமைப்பினர், தமிழ்நாடு நாடக நாட்டுப்புறகலைஞர்கள் நல சங் கத்தினர்,