கோவைக்கு வந்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான்
![]()
கோவைக்கு வருகை தந்த ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர் ரகுமான், தற்போது மேடையில் பாட முடியாது, கோவை மக்களுக்காக நிச்சயமாக ஒரு நாள் நான் வந்து பாடுவேன் என கூறியதால், ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்…
கோவை பங்கஜாமில் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனை குழுமம், தனது 25 வது ஆண்டு வெள்ளி விழாவை கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஹன்வென்ஷன் சென்டரில் வெகு விமர்சையாக கொண்டாடியது. இவ்விழாவில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், நடிகர் சரத்குமார், ஜெம் மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் சி பழனிவேலு, ஜெம் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜ், தனியார் ஆங்கில நாளிதழ் எடிட்டர் ராம், டாக்டர் எஸ்வி கந்தசாமி, கே பி ராமசாமி, அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஏ.ஆர், ரகுமான் கூறியதாவது..
எளிய தொடக்கத்திலிருந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை துறையின் முன்னோடியாக டாக்டர் பழனிவேலுவின் பயணம் வியக்கத்தக்கது என்றார். இசைக்கும், மருத்துவத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய ஏ ஆர் ரகுமான், ஒழுக்கம், விடாமுயற்சி, புதுமை, மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். சாமானிய மக்களுக்கும் குறைந்த ஊடுருவல் அறுவை சிகிச்சையை வழங்கும் ஜெம் மருத்துவமனையின் அடிப்படைக் கொள்கையையும் அதிநவீன அறுவை சிகிச்சை வசதிகளும், சாதாரண மக்களுக்கும் கிடைக்கச் செய்வதில் இந்த நிறுவனம், கொண்டுள்ள அர்ப்பணிப்பை அவர் வெகுவாக பாராட்டினார். 2001 ஆம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்ட ஜெம் மருத்துவமனை, ஒரே ஒரு சிறப்பு பிரிவை கொண்டு, இரப்பை மருத்துவமனையாக தனது பயணத்தை தொடங்கி, இன்று நவீன லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை, இரைப்பை குடல் மருத்துவத்தின் பல்வேறு சிறப்பு பிரிவுகள், உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, மற்றும் முழுமையான புற்றுநோய் சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னணி மருத்துவ குழுவமாக வளர்ந்துள்ளது அதற்கு தனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்தார். விழா மேடையில் பேசிய.. ஏ.ஆர் ரகுமான் தமிழைக் கேட்டு எத்தனை நாட்கள் ஆகின்றது, தமிழ் கேட்கப்படும் பொழுது என் காதுகளுக்குள் இசை இசைக்கின்றது என்றார்.
வெளிநாடுகளிலேயே அதிகமாக சென்று வருவதால் ஆங்கிலத்தையே அதிகமாக பேசி வருகிறோம் ஆனால் தமிழ் மொழியே எனக்கு தாய் மொழி என்பதை காதுகளில் கேட்கும் பொழுது புரிகிறது என்றார். தொடர்ந்து ரசிகர்களுக்காக ஒரு பாடல் பாடுமாறு கேட்ட பொழுது, தற்பொழுது நீண்ட தூரம் பயணித்து இங்கு வந்துள்ளதால் உடல்நலம் சற்று சோர்வாக இருக்கின்றது நிச்சயமாக ரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக, கோவையில் நான் ஒரு நாள் கோவை மக்களுக்காக பாடுவேன் என்று கூறினார். இதனால் ஏ ஆர் ரகுமானின் பாடலை கேட்பதற்காக வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றமுடன் திரும்பினர்.

