சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு விழா தேசிய விழாவாக கொண்டாடப் பட வேண்டும்

Loading

சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு விழா தேசிய விழாவாக கொண்டாடப் பட வேண்டும்:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர் பேச்சு !
புதுச்சேரி: நாடகத் தந்தை என்று போற்றப்படும் மாபெரும் கலைஞர் சங்கரதாஸ் சுவாமிகளின்  நினைவு விழா தேசிய விழாவாக கொண்டாடப் பட வேண்டும். பொதுவானதொரு கலை வடிவத்தை அவர்தான் தொட ங்கி வைத்து மேன்மைப்படுத்தினார்.
தமிழ் மக்களை எல்லாம் நாடகத்தால் ஒருங்கிணைந்திட்டார். சங்கரதாஸ் சுவாமிகள் எனும் பெரும் ஆலமரத் தின் கிளைகளாக பரிணமித்தவர் களே இன்றைய கலைஞர்கள். ஆகவே அவரின் ஒவ்வொரு ஆண்டு நினை வேந்தலையும் நாம் உவகையுடன் கொண்டாட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழர்களுடைய அடையாளம் என் பதே அவர்களின் பழங்கலைகள்தான்; அதனைப் போற்றி பாதுகாத்திட வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் திரைப்பட நடிகருமான நாசர் பேசினார்.

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 101 வது நினைவேந்தல் விழா புதுச்சேரி மாநில கலை இலக் கிய பெருமன்றத்தின் சார்பிலும், புது ச்சேரி அரசு பங்கேற்புடனும், அரசு விழாவாக, கலைஞர்-எழுத்தாளர் களின் பேரணி ஊர்வலத்துடன், அவ ரது புதுவை கருவடிக்குப்பம்  மயானத் தில் உள்ள நினைவிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன் றத்தின் புதுச்சேரி மாநில மதிப்புறு தலைவர் மு.கு. இராமன் தலைமை யில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி அமைச்சர் க.லட்சுமி நாராயணன்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் அ. கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், புதுவை முன்னாள் அமைச்சருமான விசுவ நாதன், இந்திய கம்யூ.கட்சியின் புதுவை மாநில செயலாளரான அ.மு. சலீம், தென்னிந்திய நடிகர் சங்கத் தின் தலைவர் நாசர், துணைத் தலை வர் பூச்சி முருகன், நாடக ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் பார்த்திபராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்புரைத்து பேசினர்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன் றத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் எல்லை சிவக்குமார் , மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆதிராமன் ,வ. சுப் பையா உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்திட்டனர்

கருவடிக்குப்பம் மயானபூமியின் நினைவிடத்திலுள்ள சங்கரதாஸ் சுவாமிகளின் திரு உருவச்சலைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன் றத்தினர், மதுரை, திண்டுக்கல், புதுக் கோட்டை,மணப்பாறை உள்ளிட்ட தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத் தினர், புதுச்சேரி நாடக கலைஞர்கள் பொதுநல கூட்டமைப்பினர், தமிழ்நாடு நாடக நாட்டுப்புறகலைஞர்கள் நல சங் கத்தினர்,

விழுப்புரம் மாவட்ட தெருக் கூத்து கலைஞர்கள் சங்கத்தினர், பெரம்ப
லூர் மாவட்ட ஜீவா,அம்பேத்கர்  நாட் டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல சங்கங்களின் கலை ஞர்கள் மலரஞ்சலி செலுத்தினர். கலைஞர்கள் அனைவரையும் விழா குழு சார்பாக நாசர் அவர்கள் பய னாடை அணிவித்து சிறப்பு செய் திட்டார்.
சங்கரதாஸ் சுவாமிகளின் மணிமண் டபத்தின் ஒரு பகுதியாக அனைத்து நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக் கான நிகழ்கலை ஒத்திகை அரங்கம் ஒன்றை புதுச்சேரி அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என விழாக் குழுவின் சார்பாக கோரிக்கை தீர்மானம் முன்மொழியப்பட்டது .
விழாவின் முடிவில் கலை இலக்கிய பெருமன்றத்தின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் பெ. பாலகங்கா தரன் நன்றி தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *