ஈரோட்டில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நடைப்பயணப் பேரணி

Loading

ஈரோட்டில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நடைப்பயணப் பேரணி
​ஈரோடு, நவம்பர் 18:
​உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு தி ஜி பவுண்டேசன் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் பாராமெடிக்கல் அண்ட் அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவா் மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு நடைப்பயணப் பேரணியை நடத்தினார்கள்.
​இப்பேரணியை தி ஜி பவுண்டேசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் சக்தி ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகளின்படி, உலகளவில் சுமார் 83 கோடி (830 Million) மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF Diabetes Atlas) ஆய்வின்படி, 20 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் 9 பேரில் ஒருவருக்கு (சுமார் 58.9 கோடி பேர்) இந்நோய் உள்ளது. இதில் சுமார் 43 சதவீதத்தினருக்கு (25.2 கோடி பேர்) தனக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
​மேலும் அவர் கூறுகையில், உலகளவில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 81 சதவீதம் பேர் இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே வசிக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 34 லட்சம் (3.4 Million) உயிரிழப்புகள் சர்க்கரை நோய் மற்றும் அதன் பாதிப்புகளால் ஏற்படுகின்றன. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், உடல் பருமன் மற்றும் மரபியல் போன்றவையே சர்க்கரை நோய் வருவதற்கான முக்கிய காரணமாகும்.
​”இதனால் 40 வயதுக்கு மேற்பட்டோர் வருடம் ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்வது அவசியமாகும். பொதுமக்களின் கண் நலனுக்காக நவம்பர் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் இங்கு உலகத்தரம் வாய்ந்த லாசிக் (ஸ்மைல்) மற்றும் அதி நவீன துல்லிய கண்புரை அறுவை சிகிச்சை (LRCS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
​இந்த விழிப்புணர்வு நடைப்பயணப் பேரணியில் தி ஜி பவுண்டேசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சக்தி ராஜேஸ்வரி, அபிராமி சுதன், சாம்பவி, அஷ்மிதா மற்றும் மேனேஜர் கிஷோர், மார்க்கெட்டிங் மேனேஜர் கோவிந்த், பாபு மற்றும் ரமேஷ், மாரியப்பன் மற்றும் தி ஜி பவுண்டேசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
0Shares