சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி

Loading

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி
ரஜினிகாந்த் பட டைட்டிலான ‘மாவீரன்’ படத்தில், ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக் கத்தில் அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன், அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். கவுதம் கார்த்திக் நடித்த ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் 21வது படம், கமல்ஹாசன் தயாரிக்கும் 51வது படமாகும்.
முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத், இமான் ஆகியோர் மாறி மாறி இசை அமைத்து வருவதால், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் காஷ்மீரில் தொடங்குகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *