தமிழ்நாடு யோகா ஓபன் சாம்பியன்ஷிப் 2022க்கான போட்டி

Loading

மதுரையில் யோகா 77 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கின்னஸ் சாதனையில் இடம் பெறும் விதமாக தமிழ்நாடு யோகா ஓபன் சாம்பியன்ஷிப் 2022க்கான போட்டி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கலாம் பாரம்பரிய கலை அகடாமி நிறுவனர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் யோகா போட்டிகள் நடைபெற்றது. சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தியாகராஜர சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனர் நிமலன் நீலமேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கின்னஸ் சான்றிதழ்கள் பரிசுகளை வழங்கினார். கலாம் பாரம்பரிய கலை அகாடமி நிர்வாகிகள் மணிமேகலை, சோமசுந்தரம், அழகு முருகன்,  ராஜேஷ், சத்யபாண்டி, சந்துரு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply