Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை செப்டம்பர் 01, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை செப்டம்பர் 01, 2021
சென்னை: பிலவ வருடம் ஆவணி 16ஆம் தேதி செப்டம்பர் 01,2021 புதன்கிழமை. தசமி திதி முழுநாள். மிருகஷீரிடம் நட்சத்திரம் பகல் 12.34 மணி வரை அதன் பின் திருவாதிரை நட்சத்திரம். சந்திரன் இன்றைய மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. புதன்பகவான் ஆசி நிறைந்த புதன்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம். .
மேஷம்
மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவுகள் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்
ரிஷபம்
சந்திரன் இன்று குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது உற்சாகத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும்.
மிதுனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு வருவதால் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து விற்பனை மூலம் லாபம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.
கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வரவுக்கு ஏற்ற செலவுகளும் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு நன்றாக இருப்பதால் கடன் பிரச்சினை நீங்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.
சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பழைய கடன் பிரச்சினைகள் நீங்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டிற்கு வரும் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் பணவரவு வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
துலாம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரனால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப்பலன் கிடைக்கும். கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.
மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.
கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் தேடி வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உறவினர்களின் உதவி தேடி வரும். சுகமான சம்பவங்கள் நடைபெறும் நாள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.