கோவையில் மகளிர் அணி சார்பாக நிலவேம்பு கசாயம்
![]()
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட மகளிர் அணி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சி, கோவை மாவட்ட மகளிர் அணி சார்பாக, நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ஹனிப் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுலைகா வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் முதன்மை செயலாளர் ஜாபர் அலி, மற்றும் துணைச் செயலாளர் அப்பாஸ், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில தொண்டர் அணி செயலாளர் ரவி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் வாயிலாக சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது தற்பொழுது அதிக அளவில் மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு அதிக அளவில் தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகின்றது. தொற்று நோயை குணப்படுத்தும் வகையிலும், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் இத்தகைய நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அனிஷா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

