கோவை தமுமுக பொதுக்குழு கூட்டம்
![]()
தவெக கூட்டணியில் ஆட்சி நிலைத்தன்மை குறித்த கேள்விக்கு நான் ஒன்றும் ஜோசியகாரர் இல்லை ஆருடம் சொல்ல என்று செய்தியாளர்களின் கேள்விக்கு நக்கலாக பதில் தந்த ஜவாஹிருல்லா!!!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், மாநில தலைமை பொதுக்குழுக்கூட்டம் கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு, மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், மாநில நிர்வாகிகளும், கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து சுமார், 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டு, பதவியேற்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜவாஹிருல்லா கூறியதாவது.
கோவையில் தமுமுக சார்பாக தலைமை பொதுக்கூழு கூட்டம் நடைபெற்றது. இது தேர்தல் பொதுக்குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒறுமுறை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் நடைபெறும் இதில் நிருவாகிகள் முதல் தலைமை வரை தேர்வு செய்யபடும். கடந்த இரண்டு மாதங்களாக கிளை முதல் மாவட்டம் வரையிலான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று நிறைவு பெற்றது. அதனுடைய இறுதியாக தலைமையினுடைய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தமுமுக தலைவராக தன்னை தேர்வு செய்துள்ளனர், பொதுச்செயலாளராக பேராசிரியர் ஹாஜா கனியை தேர்வு செய்துள்ளனர். பொருளாளராக சபியுள்ளா கானை தேர்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை வரும் நவம்பர் 17ம் தேதி முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது இரண்டு கோரிக்கைகளுக்காக, இதனை நடத்த உள்ளதாகவும் அதில் முதல் கோரிக்கை தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க பட்டது. கடந்த ஆட்சியில் திமுக அரசு அறிவித்தது அந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நிதியரசர்கள் கொண்ட அமர்வு கடந்த அக்டோபர் 2025 இல் அது சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் கடந்த ஜூன் 2026 இல் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு நீதி அரசர்கள், எம் எஸ் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது இதனை கண்டித்தும் நீண்டகால இரண்டாவதாக, நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார் தொடர்ந்து தவெக கூட்டணியில் ஆட்சி நிலைத்தன்மை யாக இருக்குமா என்ற, கேள்விக்கு நான் ஒன்றும் ஜோசியகாரர் இல்லை ஆருடம் சொல்ல என்று தெரிவித்தார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமத், மாநில பொதுச் செயலாளர் ஹாஜகனி, மாநில பொருளாளர் உமர், சபியுல்லா, மாநில செயலாளர் சாகுல் ஹமீது, நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

