கிரஷர் நிறுவனத்தால் பாதிக்கபடும் பொதுமக்கள்
![]()
கோவை மலுமிச்சம்பட்டிஅன்பு நகர் ஹவுஸிங் போர்டு குடியிருப்பு அருகே, இயங்கும் கல்குவாரி கிரஷர் நிறுவனத்தால், பாதிக்க படும் பொதுமக்கள்! உரிய நடவடிக்கை எடுத்து, குவாரியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம்.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி, அன்பு நகர் ஹவுசிங் போர்டு பகுதியில், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இங்கு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே, எந்தவித முறையான அனுமதியும் இல்லாமல், சட்டவிரோதமாக கல் குவாரி கிரஷர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கிரஷர் மூலமாக கற்களை மணலாக அரைக்கும் பொழுது, அதிலிருந்து எழும் மணல் தூசுகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் தூசியாக வருகின்றது. இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகுவதாகவும், கிரஷரில் இருந்து அதிக அளவில் கிளம்பும் கல், தூசு, மற்றும் புகை காரணமாக வீடுகள் முழுவதும் தூசி படிந்து சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. காற்றில் பரவும் தூசு மாசுபாடு காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் பொதுமக்கள், என பலருக்கும் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, கண் எரிச்சல், உள்ளிட்ட பல உடல் நல குறைபாடு ஏற்படுகின்றது. இங்கு இயக்கபடும் கிரஷர் இயந்திரங்களின் அதிகப்படியான சத்தம், மற்றும் அதிர்வு காரணமாக குடியிருப்புகளில் வசிக்க முடியாத சூழல் நிலவுகின்றது. எனவே அரசு அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அனுமதி இல்லாமல் இயங்கும் கல் குவாரி கிரஷரை, மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் இந்த சட்டவிரோத கிரஷரை உடனடியாக மூடி s
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த ஊர் பொதுமக்களே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

