தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மகளிர் சுய உதவி குழு தயாரிப்பை பார்வையிட்டார்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மகளிர் சுய உதவி குழு தயாரிப்பை பார்வையிட்டார்

 

தமிழ்நாடு முதலமைச்சர் . ச.ஜோசப் விஜய் அவர்கள்  ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.நா.ஆனந்த், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத் குமார், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி, மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி சி. விஜயலட்சுமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ச. கந்தசாமி, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

0Shares