செங்கல் கொட்டியிருக்கும் வீடுகளில் கட்டிங் கேட்க மாட்டேன்: பாஜக வேட்பாளர் பேட்டி
![]()
சென்னை, பிப்- 2
செங்கல் கொட்டியிருக்கும் வீடுகளுக்கு கட்டிங் கேட்க மாட்டேன் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 49 வது வார்டு வேட்பாளர் வன்னியராஜன் தெரிவித்தார்
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேற்று நள்ளிரவு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது, 113 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் 49 வது வார்டு பாஜக வேட்பாளராக வன்னியராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார், பட்டியலில் தனது பெயரை அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் திளைத்த வன்னியராஜன் நமக்களித்த பேட்டி
எங்கள் வார்டில் பாரம்பரிய மிக்க கவுன்சிலர்களாக சுந்தரமூர்த்தி செட்டியார், திருவேங்கடம் நாய்க்கர், ராஜரத்தினம் நாய்க்கர் போன்றவர்கள் இருந்தனர், ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மாயாண்டி நாடார் சிறப்பாக பணியாற்றியுள்ளார், அந்த தொகுதியின் இந்த வார்டில் நான் நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பெரியோரின் வழியில் நேர்மையான கவுன்சிலராக செயல்படுவேன், தெருக்களில் எந்த வீட்டு வாசலிலாவது செங்கல் தெரிந்தால் அங்கே நான் நிற்க மாட்டேன், மக்களின் அடிப்படை பிரச்னைகள் எனக்கு ஒரளவு தெரியும், அந்த பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றார், அவர்

