கூட்டுறவு அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை
![]()
சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பாக விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க விவசாயிகள் சார்பாக இன்று சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தலின் போது அறிவித்த கூட்டுறவு சங்க கடன் முழுவதையும் ரத்து செய்கிறோம் என்று அறிவித்திருந்தது ஆனால் வெற்றி பெற்று ஆட்சிக்கு அமைந்த பின்னர் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்கள் 5 ஏக்கருக்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாகவும் 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் கூறியதை விட மிக குறைவாக தற்போது வழங்கியதால் விவசாயிகள் தமிழக முழுவதும் கொந்தளிப்புடன் உள்ளனர். தமிழக முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் துரைசாமி ஆறுமுகம் ஒருங்கிணைப்பாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

