மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்
![]()
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர்
அவர்கள், கோபாலபுரம் விளையாட்டு மைதானம் நுங்கம்பாக்கம் விளையாட்டுமைதானம்,
கில்நகர் விளையாட்டு மைதானம் மற்றும் கில் நகர் பூங்காவினை இன்று பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச.ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை என்கிற பெயரில் மூன்று நாட்கள்
அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி கோப்பை மற்றும் பரிசுகள்
வழங்கப்படும் என
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள்
தகவல்.
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர்
அவர்கள், கோபாலபுரம் விளையாட்டு மைதானம் நுங்கம்பாக்கம் விளையாட்டு
மைதானம், கில்நகர் விளையாட்டு மைதானம் மற்றும் கில் நகர் பூங்காவினை இன்று
(17.05.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த விளையாட்டு மைதானங்களை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர்
அவர்கள் பார்வையிட்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார்.
அப்பொழுது அவர்களுக்குத் தேவையான வசதிகள் என தெரிவித்த கோரிக்கைகளான
மழை பெய்தால் தேங்கும் மழை நீரை அகற்றும் வகையில். தாழ்வான பகுதிகளில் மண்
நிரப்பி சரி செய்தல், பாதுகாப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்துதல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி கிரிக்கெட் வலை பயிற்சி உள்ளிட்ட
கோரிக்கைகளை நிறைவேற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கில் நகர் பூங்காவினைப் பார்வையிட்டு மக்களிடம்
கலந்துரையாடினார் இதன் தொடர்ச்சியாக அங்கிருந்த யோகா மேடையில் மேற்கூரை
அமைத்தல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் மற்றும் கழிவறை வசதிகளை
ஏற்படுத்துதல் ஆகியவற்றினை நிறைவேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை என்கிற பெயரில் அனைத்து விதமான
விளையாட்டுப் போட்டிகளும் மூன்று நாட்கள் நடத்தப்பட்டு போட்டிகளின் முடிவில்
கோப்பையும் , பரிசுகளும் வழங்கப்படும் என்று. தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் மற்றும்
மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு : இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்,
பெருநகர சென்னை மாநகராட்சி

