தெருநாய்8 பேரை கடித்த45 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

Loading

கடம்பத்தூர் ஒன்றியத்தில் தெருநாய் ஒன்று 8 பேரை கடித்ததையடுத்து கால்நடை மருத்தவர்கள் 45 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர் :
திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர், ஏப்.28: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்றவர்களையும்,  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும்  தெரு நாய்கள் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி கடம்பத்துார் ஒன்றியம் கல்லம்பேடு ஊராட்சி பூவனுார் கிராமத்தில் கீதா (32) சாய் சி்னனராசு (28), குப்பன்(52), கல்லம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(38), மணிமேகலை(42) மற்றும் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மூவர் உட்பட 8 பேரை நாய் கடித்தது.நாய் கடிக்கு உள்ளான அனைவரும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ க்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, நடராஜன் ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்று கடம்பத்துார் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் கல்லம்பேடு ஊராட்சிப்பகுதியில் கல்லம்பேடடில் 16 நாய்கள் மற்றும் பூவனுாரில் 9 நாய்கள் என  25 தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணி மேற்கொண்டனர். இதேபோல் கூவம் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம், கூவம் பகுதியில் 20 தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட்டனர்
0Shares