மகளிர் சுய உதவிக்குழுவினர்  ரங்கோலி  மூலம் விழிப்புணர்வு

Loading

தேனி மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision)  பணிகள் தொடர்பாக மகளிர் சுய உதவிக்குழுவினர்  ரங்கோலி  மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட  தேர்தல் அலுவலர் /     மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்   (10.11.2025) அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision) பணிகள் தொடர்பாக  மகளிர் சுய உதவிக்குழுவினர் ரங்கோலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட  தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

 

இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்  சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer – BLO)   இல்லம் தோறும்  சென்று, கணக்கெடுப்புப் படிவம்  விநியோகம் செய்யப்பட்டு, சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு   வருகிறது.

 

அதனடிப்படையில் இன்றைய தினம் மகளிர் திட்டம் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர்  மூலம் கணக்கெடுக்கும் பணி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்,  பெயர்களை சேர்த்தல்/ஆட்சேபனை தெரிவித்தல், புகார்கள் சரிபார்ப்பு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விவரங்களை பொதுமக்ளுக்கு தெரிவிக்கும் வகையில்,  மகளிர் சுய உதவிக்குழுவினரால் ரங்கோலி மூலம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை  மாவட்ட  தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு,  வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.நல்லதம்பி, உதவி திட்ட அலுவலர்  திரு.அன்புராஜா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

0Shares