நாட்டு பட்டாசு வெடித்து 4 மாடுகள் காயம்

Loading

திருவள்ளூர் அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் நுழைவதை கட்டுப்படுத்த வைத்த நாட்டு பட்டாசு வெடித்து 4 மாடுகள் காயம் :
திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் கல்லம்பேடு பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் இருப்பதால் அங்குள்ள விளை நிலங்களில் நெற்பயிர்கள் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் பயிரிட்ட நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் விளைச்சல் நிலத்தில் உள்ளே புகுந்து நாசம் செய்யாமல் இருப்பதற்காக நாட்டு பட்டாசுகளை வைத்து விரட்டுவது உண்டு.
இந்நிலையில் கொட்டையூர், கல்லம்பேடு பகுதிகளை சேர்ந்த மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் பயிர்களை கடித்துள்ளது. அப்போது நாட்டு பட்டாசு வெடித்ததில் 2 எருமை மாடுகள், 2 பசு மாடுகள் என 4 மாடுகளுக்கு வாய் பகுதி கிழிந்து பலத்த காயமடைந்தது.இது குறித்த தகவல் அறிந்த மப்பேடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில்  கல்லம்பேடு பகுதியைச் சேர்ந்த ஐ.பி.பாலசாமி 2 கன்றுகளை ஈன்ற பசுமாடுகள்,  மற்றும் கொட்டையூர் பகுதியை சேர்ந்த சூர்யாவின் 2 எருமை மாடுகள்  என 4  மாடுகள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் காயமடைந்த 4 மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.பால் வியாபாரம் மூலமாக வாழ்வாதாரத்தை காத்து வந்த மாடுகள் மேய்ச்சலுக்காக சென்று நாட்டு பட்டாசு வெடித்து காயமடைந்ததை கண்டு மாட்டின் உரிமையாளர்கள் கண் கலங்கினார்கள்.சிலரின் மாடுகள் வீட்டிற்கு திரும்பாததால் சிலர் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் வீட்டின் அருகே கட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
0Shares