ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை
![]()
ஈரோடு
ஈரோடு மாவட்டம் தலமலை தொட்டபுரம் **ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை** சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
“வாக்கு செலுத்துவதே கடமை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் பெருமை” என்ற வாசகம் தாங்கிய விளம்பரப் பதாகையை ஈரோடு நேதாஜி காய்கறி சந்தைக்கு வரும் வாகனங்களில் அறக்கட்டளையினர் பொருத்தினர். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த முயற்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்று, ஜனநாயகக் கடமையை வலியுறுத்தியது.

