கோவை ராயல் கேர் மருத்துவமனையில் புதிய பிரிவு
![]()
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் புதிய நவீன மகப்பேறு மையம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, கவுண்டம்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நீரில் பிரசவிக்கும் வசதி, வலியற்ற பிரசவ சிகிச்சை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ராயல் கிரேடில் எனும் நவீன மகப்பேறு மருத்துவ பிரிவை கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ரிப்பன் திறந்து வைத்தார்
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள, ராயல் கேர் மருத்துவமனையில், தாய்மார்கள் பாதுகாப்பான, வசதியான மற்றும் தனிப்பட்ட பராமரிப்புடன் குழந்தை பெற்றெடுக்கும் அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன மகப்பேறு மையமான ராயல் கிரேடில் பிரசவ மையம்’ தொடங்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழாவுக்கு ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.
இதில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராயல் கிரேடில் மகப்பேறு பிரிவை திறந்து வைத்தார்…
விழாவில் கவுரவ அழைப்பாளராக சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பங்கேற்றார்..
தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரசவ மையத்தில், நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய பிரத்யேகப் பிரசவ அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மருத்துவத் தகுதி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு, பிரசவ வலியின்போது நீரில் இருப்பது அல்லது நீரில் குழந்தை பெற்றெடுப்பது போன்ற வசதிகளும் வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..
நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கல்யாண குமாரி,கலைவாணி,பிரேமலதா,வினோதி னி,மற்றும்
ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி ,,முதன்மை செயல் அதிகாரி.மணி செந்தில் குமார்,மார்க்கெட்டிங் பிரிவு சீனியர் பொது மேலாளர் வெங்கடேசன் உட்பட மருத்துவர்கள்,செவிலியர்கள்,மரு த்துவமனை ஊழயர்கள் என பலர் கலந்து கொண்டனர்….

