கோவையில் நடைபெற்ற சிறப்பு ஆராதனை

Loading

கோவை கேஎன்ஜி புதூர் பிரிவு பகுதியில் உள்ள, கர்மேல் ஜெபகோபுரம் எனும் தேவாலயத்தின் 19வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்..
கோவை கேஎன்ஜி புதூர் பிரிவு பகுதியில், கர்மேல் ஜெபகோபுரம் எனும் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் 19வது ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பைபிள் கதைகள், வசனங்கள், இனிமையான பாடல்கள், ஆசீர்வாதமான செய்திகள் எடுத்து கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சபை போதகர்கள் ஜோயல் ஆஸ்டின், போதகர் எப்சிபா ஜோயல், சேசன் கிரேஸி ஆகியோர் சிறப்பு ஆராதனை செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பெத்தலகேம் ஜாய் ஜெப வீட்டின் தலைமை போதகர் ஜான் பீட்டர், கர்மேல் ஜெபகோபுரம் தலைமை போதகர் தேஜஸ்வி கோம்ஸ், போதகர் தேவதாஸ், போதகர் விஜி, போதகர் ஜெயக்குமார், நோட்டரி வழக்கறிஞர் புஸ்பாணந்தம், போதகர் ஜான் கோபி, போதகர் ஜான், போதகர் அருள், போதகர் சூசன், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, மோகன்ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares