அஜித்குமார் லால் மோகன் சாதனை புத்தகம் வெளியீடு

Loading

கோவை
கோவை ஏ.ஜே.கே. கல்வி குழுமங்களின் தலைவரும், செயலாளருமான அஜித்குமார் லால் மோகன், தன்னுடைய தந்தையும், விஞ்ஞானியுமான ஆர்.எஸ். லால்மோகனின், சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான அறிவுப்பெருங்கடல் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். 
கோவை ஏ.ஜே.கே. கல்வி குழுமங்களின் தலைவரும், செயலாளருமான அஜித்குமார் லால் மோகன், தன்னுடைய தந்தையும், விஞ்ஞானியுமான ஆர்.எஸ். லால்மோகனின், சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான அறிவுப்பெருங்கடல் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டுவிழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவுக்கு வந்து இருந்தவர்களை வரவேற்று அஜித்குமார் லால்மோகன் கூறியதாவது..
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த என்னுடைய தந்தை லால்மோகன் இயற்கையை பாதுகாக்க பல்வேறு சேவைகளை செய்தவர். இதனால் ஏற்பட்ட வழக்குகளை நீதிக்காக போராடி வென்றவர். அவரது வாழ்க்கை சாதாரணமானது அல்ல. விஞ்ஞானியாகவும், மனிதநேயமிக்கவராகவும் சேவையாற்றியவர். இந்த புத்தகத்தை எழுதி வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். புத்தகத்தை நாகர்கோவில் சாமிதோப்பு அய்யாவழி ஆன்மிக குரு பாலபிரஜாபதி அடிகளார் வெளியிட, ஜி.ஆர்.ஜி. கல்வி குழும நிர்வாகி நந்தினி ரங்கசாமி பெற்றுக்கொண்டார். கோவை சி.எஸ்.ஐ. டயோசிஸ் துணைத்தலைவர் எல்.டேவிட் பர்னபாஸ், ஆர்த்தோ ஒன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் டேவிட் ராஜன், மூத்த வக்கீல் என்.சுந்தரவடிவேலு, சுஜாதா ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகம் குறித்தும், லால்மோகனின் பெருமைகள் குறித்தும் பேசினார்கள். விழால் ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி இயக்குனர் பிந்து அஜித் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares