அதிமுக சட்டமன்ற வேட்பாளர் பி.வி ரமணா விஷன்2030
![]()
திருவள்ளூர் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் பி.வி ரமணா ஏற்பாட்டில் இளைஞர்களின் திருவிழா என்ற தலைப்பில் விஷன் 2030 டாக்குமெண்ட் வெளியிடப்பட்டது :
திருவள்ளூர் ஏப் 20 : திருவள்ளூரில் அதிமுக சார்பில் பி.வி. ரமணா போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் தொகுதியின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை என்ற பெயரில் நீர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு நம்பகத்தன்மை, சுகாதார சேவைகள் அணுகல், வேலை வாய்ப்புகள் திறன் மேம்பாடு, பெண்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி, வெளிப்படையான ஆட்சி, போதைப் பொருள் இல்லாத சமுதாயம் போன்ற திட்டங்களை உருவாக்கி இளைஞர்களின் திருவிழா என்ற பெயரில் என்ற ஒரு நிகழ்ச்சி திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயில் மில் பகுதியில் நடைபெற்றது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் விஷன் டாக்குமெண்ட் 2030 என்ற திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான் ஆவணத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆவணத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்த திட்டத்தை திருவள்ளூர் தொகுதி வளர்ச்சிக்காக செயல்படுத்துவோம் என்றும் அதிமுக வேட்பாளர் பி.வி ரமணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.